Wednesday, November 11, 2009

பில்டிங் ஸ்ட்ராங்கு ,பேஸ்மென்ட் கொஞ்சம் வீக்


பில்டிங் ஸ்ட்ராங்கு ,பேஸ்மென்ட் கொஞ்சம் வீக் ...
 இந்த தலைப்புக்கு ..

இது ஒரு நல்ல உதாரணம் ....


நன்றி: நண்பரின் மின்னஞ்சல் :








 


^

^

^

^


^

^


^

^

^


^

^








Building strong; but basement weak 

மறக்காமல் உங்கள் கருக்களை பதிக்கவும் ..
நன்றி ..

ஓட்டுப்போட என்னை அழுத்து

Wednesday, October 21, 2009

பெண்களும் மெகா சீரியலும்

ஓட்டுப்போட என்னை அழுத்து

Thursday, October 15, 2009

அகட விகடம் (FUN AROUND US)

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!!!


 நம் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சில அகட விகடங்களை இங்கே இணைத்துள்ளேன் ..

நன்றி :நண்பரின் மின்னஞ்சல் .
















மறக்காமல்
 உங்கள்
 கருத்துக்களை
 தெரிவிக்கவும்
 ...நன்றி



ஓட்டுப்போட என்னை அழுத்து

Monday, October 12, 2009

4D TOTO-சீரழியும் தமிழர்கள் -மலேசியா

அன்பு நண்பர்களே,
ரொம்ப நாலா வலை பக்கம் வர முடிய வில்லை,இப்ப நான் மலேசியா ல இருக்குறது நாள் நம்ம தமிழர்கள் பத்தி ஒரு சில விசயங்கள உங்களோட பகிர்ந்து கொள்கிறேன் ,

மலேசியா வ பொருத்தவரைக்கும் இங்க இருக்குற எல்லா RESTORAN ,ஹோட்டல் ல வேலை பாக்குறது நம்ம தமிழர்கள் தான் ,12 மணி நேரம் நின்னுகிட்டே வேலை பாத நம்ம ஊரு பணத்துக்கு 200 -250 சம்பளம் ,
20 RM -1RM=13.50 Rs, சாப்பாடு ,தங்குற இடம் கொடுக்குறாங்க,
ஆனா இந்த சம்பளத்த வாங்கி நம்ப ஆளுங்க வீட்டுக்கு அனுப்பரங்களா ,அதுதான் இல்ல ,

சைனீஸ் காரனும் ,மலாய் காரனும் சேர்ந்து ,இங்க 4 நம்பர் லாட்டரி கடை கால திறந்து வச்சிருக்காங்க ,

வாரத்துல 3 நாள் ,சில நேரம் ,சிறப்பு நு 4 நாள் கூட lot நடக்கும் ,1st price 2500 RM,
இதற்கு ஆசைப்பட்டு நம் தமிழர்கள் எடுக்கும் லாட்டரி 10 RM ,சம்பளம் 20 RM ,ஆனா இவங்க லாட்டரி காக செலவு செய்வது பாதி,அப்புறம் சிகரெட் ,தம் வேற.
அப்புறம் எப்டி ஊருக்கு பணம் அனுப்ப முடியும் ,யாரவது ஒருத்தருக்கு எப்பாவது 200RM ,பரிசு விழுந்துட்டு நு வச்சுக்குங்களேன் ,உடனே 100 RM க்கு திரும்பவும் லாட்டரி வாங்குற நம்ப ஆளுங்க நெறைய பேர்.

எப்போ தான் இவங்க திருந்த போறாங்களோ தெரில,

எல்லாரும் மலேசியா கு வந்தது சம்பாதிக்க, ஆனா இப்படி நெறைய பேர் பணத்த மலேசியா அரசாங்கத்துக்கே திரும்ப கொடுத்துட்டு,வெறுங்கையோட இந்தியா வராங்க ,

ஆண்டவன் தான் இவங்க எல்லாருக்கு நல்ல புத்திய கொடுக்கணும் ...

தொடர்ந்து வருகிறேன் நண்பர்களே...

ஓட்டுப்போட என்னை அழுத்து

Friday, March 27, 2009

$350 விலையில் ஆறாவது அறிவு

சமீபத்தில் www.ted.com என்ற இணைய தளத்தில் இருந்து கிடைக்க பெற்ற ஒரு அற்புதமான வீடியோ இங்கே தமிழ்மணம் அன்பர்களுக்காக ,கூடுதல் தகவல் இது ஒரு ப்ரொஜெக்டர் சம்பந்தமான ப்ராஜெக்ட் ,இதை உருவாக்கியதில் பெரும்பங்கு இந்தியருக்கு என்பதில் நாமெல்லாம் பெருமிதம் கொள்வோம் .


http://www.ted.com/talks/pattie_maes_demos_the_sixth_sense.html



தற்சமயம் என்னிடம் வீடியோ பதிவிறக்கி இல்லை.


நன்றி..

சீனிவாசன் ..

ஓட்டுப்போட என்னை அழுத்து

Tuesday, March 24, 2009

நான் ரசித்த புகைப்படங்கள்

சமீபத்தில் நண்பர் ஒருவரின் ஆர்குட் தளத்தில் உலவிய போது
நான் பார்த்த சிரிக்க மற்றும்

சிந்திக்கவும் தூண்டும் அருமையான புகைபடங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் ...



Ultimate answer while changing jobs:







இப்போதைய I.T ஊழியர்களின் நிலை இப்பிடித்தான் இருக்க்கிறது




ULTIMATE MANAGERS:





FACT OF THE DAY:






K GIRLS!!! Follow me....






வெளியில் வளர்ந்தென்ன லாபம் !!!!!!!!!


நன்றி ....

மறக்காமல் கருத்தை தெரிவிக்கவும்.....



ஓட்டுப்போட என்னை அழுத்து

Sunday, March 22, 2009

"அவன் அந்த பொண்ண லவ் பண்றான் னு நினைக்கிறேன் "

"அவன் அந்த பொண்ண லவ் பண்றான் னு நினைக்கிறேன் "

இது நாம சாதரணமா காலேஜ் ல படிக்கிரப்பவோ, வொர்க் பண்ற எடத்துலயோ கேக்கற ஒரு வாக்கியம் , நான் கேட்டது அந்த இடத்துல இல்லங்க ,
ஒரு UKG படிக்கிற பால் மனம் மாறாத பையன் சொன்னது ,

நான் என்னோட கோ பிரதர் வீட்டுக்கு போயிருந்தேன் ஒரு சண்டே ல, அங்க தான் இந்த நிகழ்ச்சி நடந்தது..

நாங்க எல்லாரும் ஹால் ல உக்காந்து T.V பாத்துட்டு இருந்தோம் ,ஒரு படமோ ,ஏதோ சூப்பர் சீனோ தெரில ,போயிட்டு இருந்தது..

ஹீரோ வழக்கம் போல ஹீரோ யின பாத்து லுக் விட்டுட்டு இருந்தாப்ல , அத பாத்துட்டு நம்ம குட்டி பையன் , "அவன் அந்த பொண்ண லவ் பண்றான் னு நினைக்கிறேன் "ன்னு சொன்னான் பாருங்க , நாங்கள் எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சிட்டோம் ,


இன்னும் பல சுவாராஸ்யமான விஷயங்கள் அடுத்த பதிவில் ..

உங்கள் கருத்துக்களும் விமர்சங்களும் வரவேற்க படுகிறது ....





ஓட்டுப்போட என்னை அழுத்து

Friday, March 20, 2009

மறக்க முடியாத சம்பவம் -தர்மபுரி பஸ் எரிப்பு

நான் தர்மபுரி பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டு இருக்கும் போது நெஞ்சை உலுக்கும் இந்த துயர சம்பவம் நடந்தது.சம்பவம் நடந்த இல்லக்கியம்பட்டி கு அருகிலேயே தான் எங்க ரூம் இருந்தது.நாங்க எல்லாரும் போயி பாத்தப்போ பஸ் முழுக்க எரிஞ்சி இருந்தது,,போலீஸ் குவிக்க பட்டிருந்தது.மூன்று சகோதரிகள் இறந்து போன தகவல் தெரிஞ்ச வுடன் தர்மபுரி யில் உள்ள அனைத்து கல்லூரி நண்பர்களும் அங்கு குவிந்த்விட்டனர்.. எல்லாரும் சேர்ந்து சாலை மறியல் செய்த சேலம் -பெங்களூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஐந்து மணி நேரம் தடை பட்டது.. தர்மபுரி கலெக்டர் மற்றும் அனைத்து அதிகாரிகளும் அங்கு குவிந்தனர்..

கல்லூரி நண்பர்கள் அனைவரும் "முதல்வரை வர சொல்" என கோசமிட்டுகொண்டு இருந்தனர்..சாலையை அடைத்து அனைவரும் அமர்ந்து இருந்தோம் ..

கலெக்டர் பொறுமை இழந்து " சார்ஜ்" சொல்லிட்டார்..முதன் முதலா போலீஸ் அடி யா அன்னைக்கி தான் வாங்கினேன். (அப்புறம் ஒரு வாரம் நடக்க முடியல,அது தனி கதை),பசங்க எல்லாரும் சிதறி ஓடி சாக்கடை குள்ளார லாம் விழுந்து எந்திரிச்சி ஓடினாங்க.. கண்ணீர் புகை குண்டு வீச்சு நு நான் பேப்பர் ல தான் படிச்சி இருந்தேன் ,அன்னைக்கி தான் நேர்ல பாத்தேன்..போலீஸ் குண்டு வீச ,பசங்க திருப்பி போலீஸ் ய கல்ல கொண்டு அடிச்சாங்க. ஒரே கலவரம்.

கிடச்ச பசங்கள எல்லாம் போலீஸ் அடிச்சு உதைச்சு ஜீப் ல ஏத்தி கொண்டு போனாங்க. போலீஸ் அராஜகம் ரொம்ப ஓவரா இருந்தது ,மருத்துவமனை கு தீக்காயம் பட்டவங்க ல பாக்க போன எங்களுக்கெல்லாம் அடி விழுந்தது..

என் நண்பன் ஒருத்தன் ,அடிபட்டு ஒரு வாரம் படுத்தே இருந்தான் ,நண்பர் ஒருவர் என்னோட சீனியர் SUN TV க்கு தலை இல அடிபட்ட காயத்தோட ஆவேசமா அரசியல் வாதிகளை பத்தியும் ,இத பண்ணினவங்கள தூக்குல போடணும் நு

ஓட்டுப்போட என்னை அழுத்து

Saturday, March 14, 2009

என் கல்லூரியில் நடந்த ஒரு காமெடி !!!

நான் தர்மபுரி க்கு அருகில் உள்ள பொறியியல் கல்லூரி யில் படித்துக்கொண்டு இருந்தபோது நடந்த ஒரு காமெடி (நாங்கள் செய்த குறும்பு )...

உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் ...

தர்மபுரியில என்னுடைய நண்பர்கள் 3 பேருடன் ரூம் எடுத்து தங்கிருந்தேன்.. என்னுடைய ரூம் mates பேரு காந்தி,சதீஷ்,மணி,..

இதுல சதிஷும் நானும் எப்போதும் காந்தி ய நக்கல் பண்ணி கிண்டல் அடிச்சிட்டே இருப்போம்...

ஒரு நாள் காந்தி அவங்க ஊருக்கு போயிட்டு வர்றப்ப ரெடிமேட் முட்டை பவுடர் எடுத்துட்டு வந்தான்.நாங்க ரூம் ல அப்போ சமைச்சு ஸாப்டுவோம்...

காந்தி க்கு எங்க கிளாஸ் ல மகேஸ்வரி ரொம்ப பிரென்ட் ,அதனால எங்க வீட்ல முட்டை பவுடர் இருக்கு நு சொல்ல ,அந்த பொண்ணு உடனே காந்தி ட்ட "நாளைக்கு எடுத்துட்டு வா நான் ஊருக்கு போறேன்" ...ன்னு சொல்ல ,நம்ம காந்தி உடனே அடுத்த நாள் காலையிலேயே பார்சல் பண்ணி எடுத்து வச்சுட்டான் ,எங்களுக்கு கடுப்பு,எனக்கும் சதிஷ்க்கும்..

பார்சல் பண்ணி வச்சிட்டு காந்தி குளிக்க போனான் ..எங்களுக்கு ஒரு ஐடியா தோனுச்சு, என்ன பண்ணம் நா ,எங்க வீட்ல உப்பு நெறைய இருந்தது, அப்டியே நைசா முட்டை பவுடர் பாக்கெட் ய எடுத்து, பவுடர் ய எடுத்து வேற பாத்ரதுல வச்சிட்டு ,உப்பை கொட்டி வைச்சிட்டோம், காந்தி குளிச்சிட்டு வந்தவன் அத பாக்கவே இல்ல, ஏன்ன கவர் மேல கருப்பு கவர் போட்டு மூடி வச்சிருந்தான்...

நாங்க எல்லாரும் தர்மபுரி லேந்து காலேஜ் க்கு பஸ் ல போனோம், அன்னைக்கு எல்லாரும் சேர்ந்துதான் போனோம், டெய்லி பஸ் லேந்து இறங்குன உடனே டிபன் சாப்ட அங்க ஹோட்டல் கு போவோம், போற வழி லையே மகேஸ்வரி வந்துட்டா, காந்தி உடனே பார்சல்ல அவ கை இல கொடுத்துட்டான்,

நாங்க சாப்டு லேட்டா போனோம், கிளாஸ் ரூம் ல போயி ,மகேஸ்வரி பார்சல் ல திறந்து பார்த்துட்டு கடுப்பாயிட்டா ,கிளாஸ் ரூம் ல போன உடனே காந்தி ய கூப்டு என்ன நீ உப்ப கொண்டு வந்த்ருக்க ன்னு கேக்க ?

காந்தி டென்ஷன் ஆகி எங்க ரெண்டு பேரையும் திட்டு திட்டு நு திட்டினான்..

பசங்க எல்லாரும் காந்தி ய அன்னிக்கி ஓட்டு ஓட்டு ன்னு ஊட்டி எடுத்துட்டாங்க..

அப்புறம் நைட் பஸ் ஸ்டாண்ட் கே போயி காந்தி அந்த முட்டை பவுடர் ய கொடுத்து அவல ஊருக்கு அனுப்பி வச்சிட்டு தான் வந்து தூங்குன்னான் ...

ஓட்டுப்போட என்னை அழுத்து

Thursday, March 12, 2009

ஆன் சைட் பறக்க ஆசையா?

நன்றி: பத்மநாபன் கணேசன்
16-sep 2008..

Satyam Blogs:


நானும் நிறைய எழுதணும் எனக்கு ரொம்ப ஆசை ,அதுக்கு முன் நான் படித்து ரசித்த இந்த BLOG ய ஷேர் பண்றதுல மகிழ்ச்சி...

என்ன ஒரு கஷ்டம் னா ,இத டைப் பண்ணி முடிக்க 5 மணி நேரம் ஆயிட்டு ...

---------------------------------------------------------------------------------------




Have u been to states before?

No haven't yet?(எங்க நமக்கு தெரிந்தது Bangalore,kerala அப்றம் ஆந்திரா தான்,)

Any other country?

"NO"

" what are you man,you have enough experience...should have been to on site at least once"

"yeah i could have been but...."

இந்த மாதிரி I.T Industry ல ஒரு நாளைக்கு ஒரு ஒன்பது பேராவது ஒன்பது இடத்துல பேசிட்டு இருப்பாங்க.

"ஆல்மோஸ்ட் என்னோட ப்ரெண்ட்ஸ் ,பேட்ஜ் மேட்ஸ் எல்லாம் ஆன்ஸைட் ல இருக்காங்க? நமக்குக்கெங்க ...அதுக்கெல்லாம் நேரம் காலம் வரனுங்க" னு முக்குக்கு மூணு பேராவது மூக்கால அழுது கிட்டு இருப்பாங்க

"ஏங்க..நம்ப தம்பி இப்ப போறேன் அப்போ போறேன் னு சொல்லிட்டே இருக்காப்ல ஆனா ஒண்ணும் போற மாதிரி தெரியலையே ,நம்ம ஆனந்தன் பையன் அமெரிக்கால இருக்கான் ,சகுந்தலா பொண்ணு சவ்தி ல இருக்கா.....!!!!"

-சாயங்காலம் காஃபி ய குடிச்சிக்கிட்டே வீட்டுக்கு வந்த ஒரம்பரை ங்க அளப்பரை ய கொடுத்துட்டு இருப்பாங்க ...

ஆன் ஸைட் மென்பொருள் துறையிஞரின் வாழ்வில் ,தவிர்க்க முடியாத ,மிகவும் அவசியமான ,அத்வாசியமான ஒரு வார்த்தை


ஒரு வேலை ஆகணும் நா இந்த மாதிரி இந்த மாதிரி னு ஒரு தெந்தர் விடுவான் ,உடனே நம்ம ஊரில இருக்கிற கம்பனி எல்லாம் வழக்கம் போல அடிச்சு பிடிச்சு "எனக்கு செயினு உனக்கு மோதிரம் னு " மன்னன் படத்துல ரஜினி ,கௌன்டமணி மாதிரி கடைக்குற பீஸ் ஆஃப் ப்ராஜெக்ட் அ வச்சிக்கிட்டு ஒரு வழியா புது ப்ராஜெக்ட் கு பூஜைய போட்டிருவாங்க ...அது 20 பேரு செஞ்சு முடிக்கர வேலையா இருந்தா மொதல்ல ஒரு ரெண்டு பேர அந்த நாட்டுக்கு அனுப்பி அவனக்கு என்னநென்ன வேணும் னு பக்கத்துலெ இருந்து விசாரிச்சுட்டு அங்க இருந்தே நம்மூர் ல இருக்கிர ஒரு 8 பேர் கிட்ட வேலய(உயிர) வாங்குற process தான் onsite-offshore-coordination
இந்த ரெண்டு க்ரூப் க்கும் மாமியார் ,மருமக மாதிரி எப்பவும் ஏழாம் பொருத்தம் தான் ,இவன கேட்டா அவன் ஓ பி அடிக்கிறாம்பான், அவன கேட்டா இவன் ஓ பி அடிக்கிறாம்பான்,கடைசி வரைக்கும் சித்தி ஸீரியல் ல வர்ற சாரதா,பிரபாவதி மாதிரி போறின்சிக்கிட்டே இருப்பாங்க..

இப்ப அந்த வெளிநாடு போற ரெண்டு பேரு யாருங்கிறத்ுதான் இப்ப மேட்டர்..

அப்படி போறது நாலஎன்னங்க,

நல்லா கேட்டீங்க ,

***இங்க அஞ்சு மாசம் சம்பாதிக்கரத அங்க ஒரே மாசத்துல சம்பாதிசிரிலாம்

***நம்ம negotiation skills ம், business communication skills ம் improvement ஆகும்..
**நமக்கு வேலை ரீதியாகவும் ,சமுதாய ரீதியாகவும் (கல்யாண சந்தை ) நல்ல மரியாதை கிடைக்கும்

** இங்க நாம உருவகமா பாத்து தெரிஞ்சு கிட்ட பல விசயங்கள் ,அங்க உருவமா பாக்கலாம் ,அட நான் வேலை சம்பந்தமா தாங்க சொல்றேன் ,
அப்புறம் பெருசா ஒன்னுமில்லேங்க ,நம்பளும் இந்த ஈபில் டவர் ,லண்டன் பிரிட்ஜ் ,பிரமிட்,சுதந்திரதேவி சிலை ,பைசா கோபுரம் இந்த மாதிரி பலஇடங்கள்ல சம்பிரயதமா நின்னு கேமரா வ மொறச்சு பாத்து பல ஸ்டில்லு கல எடுத்து மொத வேலையாஆர்குட் ல யோ ,பிச்காச்சோ லோயோ போட்டு ஊர் வாயில விழுக வேண்டியதுதான் ,

இங்க அவனவன் முப்பத்தி ஆறு டிகிரி வெயில் ல காஞ்சிட்டு இருப்பான் , இங்க நாம் ஆளு சுவிஸ் ல ஜெர்கின் போட்டு கிட்டு பனி ல விளையாடுற மாதிரி
போட்டோ வ போட்டு பொகைய கெளப்புவான் ..

மொத்ததுல மேனஜெமேன்ட் பொறுத்த வரை ஒரு resource அ அனுப்புறது பொம்பள புள்ளைய கட்டி குடுக்குற மாதிரி ..

மூத்தவ நல்ல பாடுவா ,சமையல் சுமாரா தெரியும் ,போக போக சரி ஆயிடும் ,மகா படி போற இடத்துல எப்டி இருக்கணும் நு சொல்லி வளத்திருகங்க நு மாதிரி , இவருக்கு ஆனதெரியும் ,குதிர தெரியும் client ல சொல்லி எப்டியாவது on site அனுப்பிருவானுக ,
அதெப்டிங்க பெரியவள வச்சிட்டு சின்னவள கட்டி கொடுத்த ஊரு தப்பா பேசாதுங்க .. அப்டிங்கற மாதிரி சீனியர் resource வச்சிட்டு ஜூனியர் resource அ அனுப்பவே மாட்டாங்க .


ப்ராஜெக்ட் வந்ததுக்கு அப்புறம் போன் ல கூப்டு " நம்ப கிட்ட ஏற்கனவே குழாய் வழியா (PipeLine) ல இருந்த "வருமோ வராத " ப்ராஜெக்ட் வந்திருக்கு ..

நேங்க கெளம்புறதுக்கு தயார்ஆ இருங்க ஒரு 10 பேர் கிட்ட தனி தனி யா சொல்லுவானுக ,இவனுகளும் நெசாமாதான் சொல்றியானு ஆனந்தி மாதிரி கேட்டுகிட்டு ,உடனே shot அ இங்க cut பண்ணி பாரின் ல ஓபன் பண்ணுவானுக ,ஒரு ரெண்டு வாரத்துக்கு தரையிலேயே நடக்க மாட்டானுக
,பில்லா படத்துல
வர்ற மாதிரி ரீரெகார்டிங் இல்லாமலே நடப்பனுக ,திரும்புவானுக,பாப்பானுக ,மேல இருந்து கூப்பிட்டு தவிர்க்க முடியாத காரணங்களால் வேற ஒருத்தர் போறாரு.. நீங்க கொஞ்ச நாளைக்கு " ஏங்கடா போங்கடா " ப்ராஜெக்ட் ல continue பண்ணுங்க சொன்னதுக்கு அப்புறம் தான் "I am Back" ன்னு தரைக்கே வருவாங்க
கொஞ்ச நாளைக்கு "வார்த்தை தவறிவிட்டாய் " ன்னு slow motion ல நடக்க ஆரம்பிச்சிருவானுக ,

ஒரு ப்ராஜெக்ட் புதுசா வருதுன்னாலே ,எல்லார் வாயிலேயும் அவுல போட்ட மாதிரி ஆயிடும் --அவன் போவான் ,இவன் போவான்ன்னு எல்லாரும் கெழக்க பாத்திட்டு இருந்தா மேக்க ஒருத்தன் மொதல்லையே கெளம்பி போயிருப்பான்,

மேல இருக்குறவங்க ,முதல்வன் ல ரகுவரன் சொல்ற மாதிரி அகலாது அணுகாது

ஒரு தொலைநோக்கு பார்வை யோட பாத்து ஒரு பொதுவான முடிவ எடுப்பாங்க ..

oneday squad ல raina க்கு பதில் கைப் ப ஏன் எடுத்தாங்க என்ற மாதிரி அக்ரோசமா
ஆறு நாளைக்கு அத பத்தி பேசிட்டு அவங்கங்க வேலைய அமைதியா பக்க ஆரம்பிச்சிடுவாங்க ,

ஆன் சைட் போனவன் "அக்கறை சீமை அழகினிலே " ,"நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்" பாடிட்டு அந்த கெத்த அப்டியே மெய்ண்டைன் பண்ணிட்டு இருப்பான்,,நம்மாளு "சொர்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா",இந்திய நாடு நம் நாடு இந்தியன் என்பது என் பேரு "ன்னு காந்தியவாதி ரேஞ்சு ல பீலிங்க்ஸ் அ போட்டு அவர அவரே ஆறுதல் படுத்திக்குவாறு..


சரி இப்போ ஒரு bachelor அ செலக்ட் பண்ணிட்டாங்க ன்னு வச்சுக்கோங்க ,மொதல்ல அவன் வொர்க் பெர்மிட் எடுக்கணும் ,அப்புறம் விசா எடுக்கணும்...இந்த காலக்கெடு நாட்ட பொறுத்து மாறும் ,US ன ஒரு வருஷம் ஆகும் (அது வரைக்கும் நாம உசிரோட இருக்கணும் )UK நா ஒரு மாசம் ஆகும் ,இதுல US விசா எடுக்கருதுல ஒரு உசரமானவெளிச்சம் (high lite)என்ன நா ஒரு கம்பெனி எத்தன விசா வ consulate ல submit பண்ணாலும் ,வருசத்துக்கு இத்தன பேர தான் அனுப்புவாங்க ன்னு ஒரு கணக்கு இருக்கு. ,,அதனால சிக்கிம், பூடான் ,மணிப்பூர் லாட்டரி மாதிரி computerised lottery சிஸ்டம் ல செலக்ட் பண்ணுவானுக ,அப்புறம் இன்னார் இன்னார் செலக்ட் ஆயிட்டாங்க ன்னு சேதி வரும் ..அதுக்கும் பொறகு consulte காரன் நாள் குறிச்சி கூப்டனுப்சி ஏன் போற எதுக்கு போற ன்னு விதி படத்துல டைகர் தயாநிதி ய சுஜாதா கேக்குற மாதிரி கேட்டுடு நம்ம பாஸ்போர்ட் ல குமுக்கு ன்னு ஒரு குத்து குத்துனாதான் நம்மபயலுக லேசா சிரிப்பனுக ,இல்லனா மந்திரிச்சி உட்டவன் மாதிரி ஆயிடுவானுக ,,

இந்த லாட்டரி ல பேரு வரதுக்குள்ள அவனவன் படர பாடு இருக்கே ,அண்ணா சொன்ன மாதிரி "விழுந்தா எப்ப எப்போ" கூப் இருக்கறவன் ,சந்தோசமா இருப்பான் .."இந்த சாப்ட்வேர் வேல எனக்கு பிடிச்சி இருந்திச்சி ,என் பேரு அன்புசெல்வன் US என்னோட 25 வருஷ கனவு ,தவம் ன்னு எ கெளதம் பட ஹீரோ கணக்கா டயலாக் விடறவன் எல்லாம் கொஞ்ச நாளைக்கு குவார்டர் அடிச்சகுரங்கு மாதிரி திரிவானுக ...

நூத்துக்கு என்பது சதவீதம் US இல்ல UK ல தான் onsite அமையும்,சரி ஒரு வழியா நமக்கு விசா கிடைச்சிட்டா மொதல்ல நமக்காக சொன்ன ப்ராஜெக்ட் இன்னும் நமக்கத்தான் இருக்கனு பாக்கணும்,இல்லேனா அடுத்த பஸ் வெடியல அஞ்சு மணிக்கு தான் ,அது வரைக்கும் இப்படி ஓரமா ஒக்கந்துகப்பா இந்த கிராமத்துல எல்லாரும் சொல்ற மாதிரி அடுத்த ப்ராஜெக்ட் வர்ற வரைக்கும் பேசாம உக்காந்திருக்க வேண்டியது தான் ..

இல்ல சினிமா ல சொல்றாப்ல "உனக்கு அவதான் அவளுக்கு நீதான் "சின்ன வயசுலே முடிவாயிசிடு ன்னு சொல்ற மாதிரி நம்ம நேரம் ஓகே ஆயிடுச்சு நா டபுள் ஓகே ..இப்போ அடுத்து client எப்போ அதுதான் கிடைச்சிருச்சே அப்புறம் என்ன நு கேப்பீங்க .இங்கயும் ஒரு ட்விஸ்ட் இருக்கும் ,ஏன்னா இந்த மாதிரி நைட் ட்ரீட் கொடுத்துட்டு சந்தோசமா டாட்டா சொல்லிட்டு போனவனெல்லாம் கலை ல நமக்கு முன்னாடி ஆபீஸ் ல ஒரு டேப்ப்பரா (அப்டி நா ,தவமாய் தவமிருந்து படத்துல சேரனோட மெட்ராஸ் வீட்ல எதிர்பாராம நம்ப ராஜ்கிரண் ஒரு சைஸ் ஆ உக்கந்திருப்பார்ல அந்த மாதிரி ) உக்காந்திட்டு இருந்த கதை எல்லாம் இருக்கு...அது பெரிய கொடுமைங்க ,,என்னாச்சு ஏதாச்சு ன்னு பாக்கறவன்எல்லாம் ஏதோ எழவு விழுந்த மாதிரி விசாரிக்க ஆரம்பிச்சிருவாங்க ...இது கூட பரவா இல்லைங்க ..மும்பை ல கனைக்சன் பிளைட் ஏறபோரவன போன் போட்டு கூப்டு "தம்பி client சைடு ல ஏதோ ஏழரை ஆயிடுச்சு ...போனவரைக்கும் போதும் பொட்டியோட திரும்ப வந்துடு ன்னு சொல்லிருவாங்க ..அது சேரி நமக்கு நேரம் சரி இல்லனா ஒட்டகத்து மேல உக்காந்தாலும் நாய் கடிக்கத்தான் செய்யும் ,, இதுனால நமக்குள்ள எப்பவுமே ஒரு பய பட்சி நொண்டி அடிச்சிட்டே இருக்கும் இந்த தடவை எல்லாம் சரியா நடக்கும்னு இல்லாத சாமிய மனசு வேண்ட ஆரம்பிச்சுரும்... நம்ம நலம் விரும்பிகள் ,நண்பர்கள் நு ஒவ்வொருதரா வந்து பயணத்துக்கான துனுக்களையும் ,நடந்துக்க வேண்டிய வழிமுறைகளையும் சொல்லி கொடுத்துட்டே கடைசி வரைக்கும் கூட இருப்பாங்க ..நீங்க என்னதான் பட்டியல் போட்டு செக் பண்ணிகிட்டாலும் கேளும்பர வரைக்கும் அத வாங்கிட்டியா ,இத வாங்கிட்டியா ன்னு லிஸ்ட் நீண்டுகிட்டே போகும் ...கெடக்குறதெல்லாம் போட்டு அமுக்கி சதுரமா வாங்குன பெட்டி அமீபா மாதிரி ஆயிடும் ...

விடியக்காலம் பிளைட் ன்னா ராத்திரி பதிநோருமணி வரைக்கும் மசமசப்பாவே இருக்கும் ....அதுக்கப்றம் தான் நம்ப பெத்தவங்களோட கொஞ்ச நேரம் மனம் விட்டு பேச முடியும் ...

இதெல்லாம் இப்படி இருக்க ஊர்ல இருந்து நம்ப அப்பத்தா போன போட்டு " உனக்கு தண்ணி ல கண்டம்னு உடுமலைபேட்டை ஜோசியர் சொல்லி இருக்காரு ,நீ தண்ணி பக்கமே போகாதே ,போற பக்கம் சூதனமா இருந்துக்கோ ,வம்பு தும்புக்கு போகாத சாமி ன்னு பாத்து வருசமா சொல்ற அதே அறிவுரைய சொல்லும் .. திடீர் ன்னு "என்னைய இப்பவா காடு வா வா ங்குது,வீடு போ போ ங்குது...இன்னிக்கோ நாளைக்கோ நான் செத்துட்டேன்னா நீ வந்து நெய் பந்தம் புடிச்சா தாண்டா என் கட்ட வேகும் "ன்னு பொசுக்குனு அழுக ஆரம்பிச்சிடும் .."இல்லாத்தா உனக்கு ஒன்னும் வராது ...நீ இன்னும் நான் பேரம் பேத்தி எடுக்குற வரைக்கும் இருப்பே" ன்னு நாம்பளும் சமாதானபடுத்துவோம் ..அதுலையும் சில பேரெல்லாம் அவுங்க தாத்தா பாட்டி கிட்ட பேசுறப்ப கைகொழைந்தை யாகவே மாறி அப்படி தவுந்துருவாங்க ..

மனேசெல்லாம் பாரமாகி அப்டியே ஒரு ரெண்டு மணி நேரம் கண்ணா அசந்தம் நா "ஏன்டா ப்ளைட்ட நீ புடிக்கனுமா நாங்க புடிக்கனுமா ?பிளைட் ல போயி தூங்கிக்கலாம் மொதல்ல எந்திரி "ன்னு ஒரு குரல் கேக்கும் ,முழிச்சி பாத்தா நம்மப்பா சும்மா புது மபலை மாதிரி ஜம்மு ன்னு கெளம்பி ரெடியா இருப்பாரு ! கண் எரிச்சலோட நம்ப நண்பர்கள் புடை சூழ ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடியே ஏர்போர்ட் போயிடுவோம் .

நம்ம பாசக்கார பசங்க எப்பவுமே ஸ்வீட் பாக்ஸ் ய கிலோ கணக்குல வாங்கி குடுப்பானுங்க ,..என்ன பிளைட் ல போறதுக்கு முன்னாடி இவ்ளோ தான் லுக்ககே எடுத்திட்டு போகணும் ன்னு ஒரு கணக்கு இருக்கு ..அதிகம் ஆகி ௩ கிலோ எடுத்திருங்க ன்னு சொன்னா ,"மச்சி அந்த மைசூர் பாகும் ,பிஸ்தா கேக்கும் சரியா மூணு கிலோ வராதா ன்னு ? நல்லவனுக மாதிரி கேப்பானுக !! இதுவும் ஒரு வகை ல "give and take policy"தான் ..

மணிக்கணக்கு நிமிச கணக்காயி சட்டுன்னு சூழ்நிலை அப்டியே சேது கிளைமாக்ஸ் மாதிரி ஆயிடும் ...பெத்தவங்க லைட்டா கலங்கி நிப்பாங்க ..பயலுக வேற திடீர்னு சந்தானம் சூர்யா வுக்கு அட்வைஸ் பண்ற மாதிரி "மச்சி பாத்துக்கொடான்னு ஒரு மாதிரி வாய்ஸ் ல பேசுவானுக !!
நிமிசகணக்கு நொடி கணக்காயிடும் ....

மௌன சத்தம் மட்டுமே கேட்கும் நேரங்கள்!

கடைசி நொடியில் அம்மாவிடம் இருந்து சில வருட இடைவெளிக்கு பின் ஒரு அன்பு முத்தம்..

ஆருயிர் நண்பர்களின் கத கத ப்பான தலுவழ்கள் ,,

யாருக்கும் கண்களில் கண்ணீர் முட்டும் தருணம் ...

கனத்த இதயத்துடன் எல்லாருக்கும் கை அசைத்து விடை கொடுத்து விட்டு ..எல்லா செக்யூரிட்டி ,எமிகரேசன் சம்ப்ரதயங்களியும் முடித்து விட்டு ,longue ல் ஒரு மணி நேரம் காத்திருப்போம் ,,அப்போது தான் நாம் தனிமை பட்டதை உணர் வோம் ..ஒரு வெறுமை வந்து மனதில் ஆக்ரமித்து கொள்ளும் ,சொல்ல போனால் நம்மை வெளியே தற்காலிகமாய் தொலைத்து விட்டு மாயையான புது மனிதனாய் ,புதிய ஊருக்கு ,புதிய கலாசாரம் ,புது உறவுகளுக்கு நம்மை அர்பணிக்க தயாரரகி விடுவோம் ,நாம் கண்டிப்பாய் நிறைய சந்தோசமான தருணங்களை (நண்பர்களின்,உறவினர்களின் திருமணம்,சொந்த ஊரில் பண்டிகைகள்,காலை நேர FM மலை நேர சாட்டிலைட் சேனல்கள், முதல் நாள் சினிமா ,இரவு நேர அர்த்தமில்லா அரட்டைகள் ,பைக் ல் நகர் வலம் இப்படி நிறைய)...கடைசி நேர போன் களில் நேரம் கரைந்து கொண்டு இருக்கும் .. ஒரு வழியா பிளைட் ல போர்டு ஆகி மேலெழும் பொது நகரம் ஒரு புள்ளியாகி பதினைந்தே நிமடங்களில் வெறும் மேகம் மட்டுமே நம் மனதை போல் வெறுமை யாக புலப்படும்..


அடுத்து பாரின் எமிகரேசன் ...

"பார்டன் மீ , பார்டன் மீ ன்னு ஒரு பத்து தடவ பாட்டு பாடி ஒரு வழியா கேள்விக்கு பதில் சொல்லி அவன் சீல் குத்துரதுககுள்ள நமக்கு பொறந்த நாள் கண்டுரும் ..

அப்புறம் நம்மள கூட்டிடு போக நண்பர் யாரவது வந்திருந்தா விசேசம் ,இல்லேன்னா குஷ்டம்தான் ,திருவிழா ல காணாம போன திருவாத்தான் மாதிரி முழிச்சிட்டு நிக்க வேண்டியது தான் ....அங்க எல்லாம் தெளிவாதான் படம் போட்டு காட்டி இருப்பான் (நமக்கு தான் பகல் லேயே பசுமாடு தெரியாதே ,இருட்டுலையா எரும மாடு தெரிய போகுது ..) தட்டு தடு மாறி கேப் புடிச்சி நம்ப கலீக்கோட ரூமுக்கோ,இல்லீனா அவரு முன்கூட்டியே ஏற்பாடு பண்ணி இருக்குற ரூம்ல போயி புது நண்பர்கள் கூட ஐக்கியம் ஆயிட வேண்டியதுதான் ,

ஆன் சைட் ல வாழ அடிப்படையான விஷயங்கள் :

** உணவு ,உடை ,உறைவிடம் அப்புறம் Broadband கனைக்சன் கூட ஒரு லேப்டாப் .

நம்ம டிவி ,ரேடியோ ,மியூசிக் பிளேயர்,விளையாட்டு மைதானம் ,சினிமா தியேட்டர் ,புத்தகம்,நீயூஸ் பாப்எல்லாமே அதுதான் , சாயங்காலம் வந்த உடனே சாணி போட்ட மாதிரி சதுக்குனு உக்காந்துக்க வேண்டியது தான் :

அப்புறம் சராசரி தமிழனை உறுத்தும் சில விஷயங்கள் :

1: TOILET ல் டிஸ்யூ பேப்பர் ,


நம்மூர் ல பேப்பர் நா சரஸ்வதி ங்குறான் ,கால் ல பட்டாலே ..பத்து தடவ தொட்டு கும்பிடுவான்

2: கால நிலை மாற்றம்

வெயில் காலத்துல வெளிச்சமும் ,குளிர் காலத்துல இருட்டும் ஜாஸ்தியா இருக்கும்..நீங்க சாயங்காலம் எவ்ளோ லேட் டா வீட்டுக்கு வந்தாலும் நேரதுள்ளே வந்த மாதிரி பிரெஷ் ஆ இருக்கும் ..ஏனா வெயில் காலத்துல பத்து மணிக்கு தான் கொஞ்சம் லைட் ஆ இருட்டும்..நைட் கொஞ்சம் லேட் ஆ பசங்கோளோட பேசிட்டே இருந்தம் ந திடீர் ன்னு விடிஞ்சிரும்...குளிர் காலத்துல இதுக்கு நேர் மாறா இருக்கும்..௩ மணிக்கெல்லாம் இருட்டிரும் ,எப்பவுமே நைட் shift ல இருக்குற பீலிங் இருக்கும்... கன்னி பொண்ணு மனசு மாதிரியே வானிலை இருக்கும் .பத்து நிமிஷம் அப்படியே இருட்டு கட்டி மழை பேயும் ,அப்புறம் பாத்தா இன்னிக்க அப்படி பாதங்க்ற மாதிரி சுல் ன்னு வெயில் அடிக்கும்..

வேல ரீதியா பார்த்தா ஒன்னும் பெருசா வித்யாசம் இருக்காது...அதே வேலை ,ஆனா வெள்ளைக்கார முதலாளி ,நமக்கு client நல்லபடியா அமையனும் ,அது ரொம்ப முக்கியம் ,அத விட முக்கியம் off-shore-Team (அந்த 8 பேரு ) சரியா வைக்கணும் ,இல்லேனா சிக்கி சீரளியா வேண்டியதுதான் ,விடிய விடிய உக்காந்து திரான்சிசன் கொடுத்திட்டு காலை ல திரும்ப வந்து கேட்டா "ராமனுக்கு பொண்டாட்டி ரம்பா "ன்னு சொல்லுவான் அகராதி புடிச்ச பய புள்ள ..

நம்ம வீட்ல இருக்குறவங்க எல்லாம் கேக்குற கேள்வி "அங்க எல்லாம் கிடைக்குமாப்பா?"

பொன்னி அரிசி லேந்து முருங்கக்காய் வரைக்கும் தரமான பொருளாவே நமக்கு கெடைக்கும் .ஊர்ல கால் ல படர பாத்ரத்த கூட எடுத்து வைக்க மாட்டான் ,இங்க வந்து குனிஞ்சு கோலம் போடறத தவிர எல்லா வேலை யும் துல்லியமா செய்வான் வேற வழி?

நம்புடைய புதிய பொழுதுபோக்குகளில் சமையலும் கண்டிப்பா சேர்ந்துடும் ..குழிபணியாரம்,கொழுகட்டை,பருப்பு வடை ,பாயாசம் ன்னு பயலுக நொருக்குவாநுக.. ஆனா சும்மா சொல்ல கூடாதுங்க ,சில பொண்ணுகள விட பசங்க ரொம்ப நல்லாவே சமைப்பாங்க ,பசங்க நாலு பேரு ஒரு வீட்ல இருந்தா கூட ஒரே அடுப்பு தான் எரியும் ,ஆனா பொண்ணுங்க வீட்ல கொறைஞ்சது ரெண்டு அடுப்பு ஆவது எரியும்.., சரி,பிரச்னை ,திசை மாறுது...

அங்க போயும் நம்பாளுக்கு பூ பூக்க ஆரம்பிச்சிரும் , "மச்சி ,நான் சொல்லலே என்னோட தேவதை ன்னு அங்க பார்ரா பனியில நனைஞ்ச புஸ்பம் மாதிரி " ன்னு சொல்லிகிட்டருக்கும் போதே அவனூட வெள்ளைக்கார தேவதை சிகரெட் எ எடுத்து பத வைக்கும்...அசிங்கத்த மிதிச்ச மாதிரி அடங்குவான்...

வேல்லைக்கறன பொருத்தவர ஒவொரு வீக்எண்டும் தீபாவளி மாதிரி..திங்க கெழம லேந்து வெள்ளி கெழம வரைக்கும் சாது வா கன்னுகுட்டி மாதிரி இருப்பானுக..வெள்ளி கெழம சாயன்காலதுலேந்து காட்சில்லா வா மாறிடுவானுக ..5 மணியில் இருந்தே அய்யனார் வேட்டை க்கு போற மாதிரி டிசைன் டிசைனா ஆம்பளை பொம்பளை வித்யாசம் இல்லாம கேலமபுவாங்க ..வேற எதுக்கு குடிச்சிட்டு கூத்தடிக்கத்தான் ....

நம்ப ஊர்ல பொண்ணுக நம்பல கண்டாவே "அதுங்க வந்துருச்சின்னு " ஜூராசிக் பார்க் ல ஓடற ஓடுவாங்க ...இங்க நெலமை நேர்மாரு நாலு பொண்ணுக கூடமா வந்தா நாய பாது ஒதுங்கற மாதிரி தப்பிச்சு ஓடிரனும் ...இல்லேனா ஆகுற ஸேதாரதுக்கு கம்பனி பொறுப்பு இல்லீங்கோ...

இந்த ஆச்சர்யம் திகைப்பெல்லாம் மொத ரெண்டு வாரத்துக்குதான் ,ஐஸ்வர்யா ராய் யே பொண்டாட்டி யா வந்தாலும் ,அந்த பெருமை ,சந்தோசமெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான் ,,,அப்புறம் அவ ஒழுங்கா சமைக்க மாட்டேங்குறா ,ஒரு சைடு ஆ நடக்குரான்னு ஏதாவது கொற சொல்ல ஆரம்பிசிடுவோம் ..பழக பழக பாலும் புளிக்கும் ங்குற மாதிரி நம்ப மெக்கானிக்கல் வாழ்க்கை போரடிக்க ஆரம்பிச்சிடும் ...நாம ஊருக்கு திரும்பி போர நாலா நெனச்சி கற்பனை பண்ண ஆரம்பிசிடுவோம் ..

மொத்ததுல இந்த " ரீல் பாதி ,ரியல் பாதி " ஜெகன் ஸ்டைல் ல சொல்லலும் னா,

ஆன் சைட் ங்கறது பப்ளிக் டோய்லெட் மாதிரி ,உள்ள இருக்குறவன் வெளிய வரணும் ன்னு நெனப்பான்,வெளிய இருக்கறவன் உள்ள போகணும் ன்னு நெனப்பான்..




நன்றி,,







ஓட்டுப்போட என்னை அழுத்து