Friday, March 20, 2009

மறக்க முடியாத சம்பவம் -தர்மபுரி பஸ் எரிப்பு

நான் தர்மபுரி பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டு இருக்கும் போது நெஞ்சை உலுக்கும் இந்த துயர சம்பவம் நடந்தது.சம்பவம் நடந்த இல்லக்கியம்பட்டி கு அருகிலேயே தான் எங்க ரூம் இருந்தது.நாங்க எல்லாரும் போயி பாத்தப்போ பஸ் முழுக்க எரிஞ்சி இருந்தது,,போலீஸ் குவிக்க பட்டிருந்தது.மூன்று சகோதரிகள் இறந்து போன தகவல் தெரிஞ்ச வுடன் தர்மபுரி யில் உள்ள அனைத்து கல்லூரி நண்பர்களும் அங்கு குவிந்த்விட்டனர்.. எல்லாரும் சேர்ந்து சாலை மறியல் செய்த சேலம் -பெங்களூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஐந்து மணி நேரம் தடை பட்டது.. தர்மபுரி கலெக்டர் மற்றும் அனைத்து அதிகாரிகளும் அங்கு குவிந்தனர்..

கல்லூரி நண்பர்கள் அனைவரும் "முதல்வரை வர சொல்" என கோசமிட்டுகொண்டு இருந்தனர்..சாலையை அடைத்து அனைவரும் அமர்ந்து இருந்தோம் ..

கலெக்டர் பொறுமை இழந்து " சார்ஜ்" சொல்லிட்டார்..முதன் முதலா போலீஸ் அடி யா அன்னைக்கி தான் வாங்கினேன். (அப்புறம் ஒரு வாரம் நடக்க முடியல,அது தனி கதை),பசங்க எல்லாரும் சிதறி ஓடி சாக்கடை குள்ளார லாம் விழுந்து எந்திரிச்சி ஓடினாங்க.. கண்ணீர் புகை குண்டு வீச்சு நு நான் பேப்பர் ல தான் படிச்சி இருந்தேன் ,அன்னைக்கி தான் நேர்ல பாத்தேன்..போலீஸ் குண்டு வீச ,பசங்க திருப்பி போலீஸ் ய கல்ல கொண்டு அடிச்சாங்க. ஒரே கலவரம்.

கிடச்ச பசங்கள எல்லாம் போலீஸ் அடிச்சு உதைச்சு ஜீப் ல ஏத்தி கொண்டு போனாங்க. போலீஸ் அராஜகம் ரொம்ப ஓவரா இருந்தது ,மருத்துவமனை கு தீக்காயம் பட்டவங்க ல பாக்க போன எங்களுக்கெல்லாம் அடி விழுந்தது..

என் நண்பன் ஒருத்தன் ,அடிபட்டு ஒரு வாரம் படுத்தே இருந்தான் ,நண்பர் ஒருவர் என்னோட சீனியர் SUN TV க்கு தலை இல அடிபட்ட காயத்தோட ஆவேசமா அரசியல் வாதிகளை பத்தியும் ,இத பண்ணினவங்கள தூக்குல போடணும் நு

ஓட்டுப்போட என்னை அழுத்து

3 comments:

சீனிவாசன் said...

தொடர்ச்சி நாளை .....எழுதுகிறேன்

யாத்ரீகன் said...

ரொம்ப கொடுமையான சம்பவம்.. ஆனா அதை செஞ்சவுங்க, அதை சேர்ந்த கட்சில இருக்குறவுங்க, பொறுப்புல இருந்தவுங்க.. யாரும் இதை ஒரு பொருட்டாவே மதிக்கலயே இப்போ.. அவுங்கள மட்டும் குறை சொல்லி என்ன புண்ணியம்.. தன் பிள்ளைங்களுக்கு நடந்தமாதிரி நெனச்சு எதிர்ப்பை காட்டியிருக்கனும்.. தனக்கு வர்றவரைக்கு அமைதினு இருந்தா.. தனக்கு வரும்போது குரல் குடுக்க யாருமே இருக்க மாட்டாங்க.... :-(

Anonymous said...

interesting
http://mizahguncel.blogspot.com/

Post a Comment