Saturday, March 14, 2009

என் கல்லூரியில் நடந்த ஒரு காமெடி !!!

நான் தர்மபுரி க்கு அருகில் உள்ள பொறியியல் கல்லூரி யில் படித்துக்கொண்டு இருந்தபோது நடந்த ஒரு காமெடி (நாங்கள் செய்த குறும்பு )...

உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் ...

தர்மபுரியில என்னுடைய நண்பர்கள் 3 பேருடன் ரூம் எடுத்து தங்கிருந்தேன்.. என்னுடைய ரூம் mates பேரு காந்தி,சதீஷ்,மணி,..

இதுல சதிஷும் நானும் எப்போதும் காந்தி ய நக்கல் பண்ணி கிண்டல் அடிச்சிட்டே இருப்போம்...

ஒரு நாள் காந்தி அவங்க ஊருக்கு போயிட்டு வர்றப்ப ரெடிமேட் முட்டை பவுடர் எடுத்துட்டு வந்தான்.நாங்க ரூம் ல அப்போ சமைச்சு ஸாப்டுவோம்...

காந்தி க்கு எங்க கிளாஸ் ல மகேஸ்வரி ரொம்ப பிரென்ட் ,அதனால எங்க வீட்ல முட்டை பவுடர் இருக்கு நு சொல்ல ,அந்த பொண்ணு உடனே காந்தி ட்ட "நாளைக்கு எடுத்துட்டு வா நான் ஊருக்கு போறேன்" ...ன்னு சொல்ல ,நம்ம காந்தி உடனே அடுத்த நாள் காலையிலேயே பார்சல் பண்ணி எடுத்து வச்சுட்டான் ,எங்களுக்கு கடுப்பு,எனக்கும் சதிஷ்க்கும்..

பார்சல் பண்ணி வச்சிட்டு காந்தி குளிக்க போனான் ..எங்களுக்கு ஒரு ஐடியா தோனுச்சு, என்ன பண்ணம் நா ,எங்க வீட்ல உப்பு நெறைய இருந்தது, அப்டியே நைசா முட்டை பவுடர் பாக்கெட் ய எடுத்து, பவுடர் ய எடுத்து வேற பாத்ரதுல வச்சிட்டு ,உப்பை கொட்டி வைச்சிட்டோம், காந்தி குளிச்சிட்டு வந்தவன் அத பாக்கவே இல்ல, ஏன்ன கவர் மேல கருப்பு கவர் போட்டு மூடி வச்சிருந்தான்...

நாங்க எல்லாரும் தர்மபுரி லேந்து காலேஜ் க்கு பஸ் ல போனோம், அன்னைக்கு எல்லாரும் சேர்ந்துதான் போனோம், டெய்லி பஸ் லேந்து இறங்குன உடனே டிபன் சாப்ட அங்க ஹோட்டல் கு போவோம், போற வழி லையே மகேஸ்வரி வந்துட்டா, காந்தி உடனே பார்சல்ல அவ கை இல கொடுத்துட்டான்,

நாங்க சாப்டு லேட்டா போனோம், கிளாஸ் ரூம் ல போயி ,மகேஸ்வரி பார்சல் ல திறந்து பார்த்துட்டு கடுப்பாயிட்டா ,கிளாஸ் ரூம் ல போன உடனே காந்தி ய கூப்டு என்ன நீ உப்ப கொண்டு வந்த்ருக்க ன்னு கேக்க ?

காந்தி டென்ஷன் ஆகி எங்க ரெண்டு பேரையும் திட்டு திட்டு நு திட்டினான்..

பசங்க எல்லாரும் காந்தி ய அன்னிக்கி ஓட்டு ஓட்டு ன்னு ஊட்டி எடுத்துட்டாங்க..

அப்புறம் நைட் பஸ் ஸ்டாண்ட் கே போயி காந்தி அந்த முட்டை பவுடர் ய கொடுத்து அவல ஊருக்கு அனுப்பி வச்சிட்டு தான் வந்து தூங்குன்னான் ...

ஓட்டுப்போட என்னை அழுத்து

2 comments:

Bleachingpowder said...

லொள்ளு தாங்க உங்களுக்கும், பாவம் பையன். அது சரி அது என்னங்க முட்டை பவுடர், நான் கேள்வி பட்டதே இல்லையே

சீனிவாசன் said...

பால் பௌடர் மாதிரித்தான் முட்ட பௌடர் . ஏற்றுமதிக்கு மட்டும்..

Post a Comment